Home » 2023 Tamil Movies » Kodi Parakura Kaalam Song Lyrics – MAAMANNAN

Kodi Parakura Kaalam Song Lyrics – MAAMANNAN

Kodi Parakura Kaalam Song Lyrics penned by Yugabharathi, music composed by AR Rahman, and sung by Kalpana Raghavendar, Rakshita Suresh, Deepthi Suresh & Aparna Harikumar from Tamil cinema ‘Maamannan‘.

Kodi Parakura Kaalam Song Credits

Maamannan Film Release Date – 29th June 2023
DirectorMari Selvaraj
ProducerUdhayanidhi Stalin
SingersKalpana, Rakshita Suresh, Deepthi Suresh, Aparna Harikumar
MusicAR Rahman
LyricsYugabharathi
Star CastUdhayanidhi Stalin, Keerthy Suresh
Music Label & Source

Kodi Parakura Kaalam Song Lyrics

பிச்சிப்பூ மலக்காடாம் காடாம்
நா பித்தம் கண்ட பூ காடாம் காடாம்
வச்ச பூவும் வாடிடுச்சே போடி
நா வாழ்ந்து கெட்ட செய்தி
இது தான் டி, ஹா

investment

வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி
வாடக்காத்து இழுக்குதடி
வாசல் தாண்ட முடியலடி

என்ன செய்வேன் நான்
என்ன செய்வேன்
ஒரு ஒத்தச்சி நான்
என்ன செய்வேன்
என் ஒண்டிவீரன் இல்லாம
என்ன செய்வேன்

காட்சி கருங்காடாம்
காலெல்லாம் உன் வழி தான்
பேச்சு வெறும் பேச்சு உன்
வேகம் எங்க போச்சி
நீ ஒடச்சி கெளம்ப வேணும்
ஒசக்க பறக்க வேணும்

ஒத்தச்சி எழுந்திரி
எங்க ஒண்டிவீரன் நீ தாண்டி
நீ தாண்டி, நீ தாண்டி
நீ தாண்டி தாண்டி… தாண்டி தாண்டி

நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி, வந்தாச்சி
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி
நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி, வந்தாச்சி
வெற்றி வெடி வெடிக்கிற நேரம் வந்தாச்சி

ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

ஓரம் போ, ஓ… ஓரம் போ, ஓ
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

வெட்டி கத தேவை இல்ல
வெக்கம் கெட்ட ஒண்ணும் இல்ல
சொட்டாங்கல்லு தொட்ட புள்ள
சொரண கெட்டா குத்தம் இல்ல

பொத்தி பொத்தி வளப்பாங்க
பொண்ண கொன்னு பொதைப்பாங்க
அங்க இங்க ஒளச்சாலும்
ஆணி வேர அறுப்பாங்க
வெவ்வேறு ஒப்பாரி ஓரம் போடி

புழுதி காட்டுக்குள்ள
பொழுதும் வீட்டுக்குள்ள
பெண்ணே நீ என்னத்த கண்ட
தடைய தாண்டி செல்ல
அலையை மோதி தள்ள
பெண்ணே நீ போடனும் சண்ட

பழைய பழைய பாட்ட
திருப்பி திருப்பி போட்டு
பண்ணாத பண்ணாத சேட்ட
ஒரு மந்திர தந்திரமில்ல
இந்திரன் சந்திரனில்ல
வந்திரு வந்திரு யாருனு காட்ட

நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி வந்தாச்சி
ஆமா போடு
வெற்றி வெடி வெடிக்கிற
நேரம் வந்தாச்சி

நம்ம கொடி பறக்குற காலம்
வந்தாச்சி வந்தாச்சி
வெற்றி வெடி வெடிக்கிற
நேரம் வந்தாச்சி

ஒத்தி வெச்ச கோவத்த நீ
நெத்தி பொட்டுல உருட்டு
ஒத்த ஒதையில் உலகத்த நீ
உள்ளங்கையில சுருட்டு

ஓரம் போ, ஓ… ஓரம் போ ஓ
தோல்வி இல்ல துணிஞ்சாலே ஏது எல்லை
எட்டுது வானம் எட்டுது
எட்டுது வானம் எட்டுது

(ஆமா போடு)
(ஓரம் போ, ஓ ஓ)

Watch கொடி பறக்குற காலம் Lyrical Video Song

Scroll to Top